×

சமூக ஊடகங்களில் போலி வீடியோக்களை அகற்ற 3 மணி நேர கெடு தேர்தல் கமிஷன் அதிரடி

புதுடெல்லி: சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள போலி வீடியோக்களை அரசியல் கட்சிகள் அகற்ற தேர்தல் கமிஷன் 3 மணி நேர கெடு விதித்தது. மக்களவை தேர்தலை முன்னிட்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் அமீர்கான், ரன்வீர் சிங் ஆகியோர் உள்பட சிலரை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட டீப்பேக் வீடியோக்கள் குறித்து தேர்தல் கமிஷனில் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இந்த வீடியோக்களை அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களில் இருந்து 3 மணி நேரத்தில் அகற்ற கெடு விதித்து உத்தரவிட்டது.

The post சமூக ஊடகங்களில் போலி வீடியோக்களை அகற்ற 3 மணி நேர கெடு தேர்தல் கமிஷன் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,Union Home Minister ,Amit Shah ,Congress ,President ,Rahul Gandhi ,Aamir Khan ,Ranveer ,Dinakaran ,
× RELATED கண்ணியமான பிரசாரத்திற்கு கட்சி...